வாராந்த சந்தை நிதியில் சிறுநீரக சிகிச்சைக்கு உதவி!

கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் நடாத்தப்பட்டு வரும் செம்மண்ணோடை வாராந்த சந்தையில் சேகரிக்கப்பட்ட இரண்டு வாராந்த சந்தை நிதியினை சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூரின் வேண்டுகோளுக்கு அமைய, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித்தினால் எம்.பாருக் என்பவருக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக வாராந்த சந்தையில் சேகரிக்கப்பட்ட நிதி இன்று (9) வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் சபையின் வருமான பரிசோதகர் எம்.எம்.எம்.ஜெஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here