UPDATE: சு.கவின் ஆதரவு கோட்டாபயவிற்கே: ஜனாதிபதி நடுநிலை!

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்று அறிவித்தது. கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐ.ம.சு.கூ பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, கட்சியின் மூத்த தலைவர் நிமால சிறிபால டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இன்று (9) கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தனர்.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்றும், தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையும் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கட்சியின் பதில் தலைவராக பணியாற்றுவார்.

சுதந்திரக்கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் அனைத்து காரணிகளும் கோட்டாபயவின் பக்கத்தில் இருப்பதால், அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஜெயசேகர குறிப்பிட்டார்.

“நாங்கள் பொதுஜன பெரமுனவில் சேருவோம் என்று அர்த்தமல்ல. எதிர்வரும் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை மட்டுமே நாங்கள் ஆதரிப்போம்” என்று அவர் விளக்கினார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக்கட்சியும், பெரமுனவும் ‘இலங்கை நிதாஸ் பொதுஜன சந்தனய’ என்ற பெயரில் நாற்காலி சின்னத்தின் கீழ் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பெரமுன மற்றும் கோட்டாபயவுடன் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் செய்யவுள்ளதாக  தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் சில உட்பிரிவுகள், ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது, அமைச்சரவையை 30 நபர்கள் வரை மட்டுப்படுத்துவது, ஒரு பொதுவான சட்டத்தை நிறுவுதல், அமைச்சரவையை இரு கட்சிகளும் பங்கிடுவது ஆகிய விடயங்கள் உள்ளடங்கும்.

இதேவேளை, ராஜபக்ச குடும்பத்துடன் சுமுக உறவை பேணாத துமிந்த திசநாயக்க, வீரகுமார திசநாயக்க ஆகியோரும் இன்று அநுராதபுரத்தில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பார்கள் என அமரவீர தெரிவித்தார்.

அங்கஜன் இராமநாதன் உரையாற்றிய போது, புதிய கொள்கை மற்றும் புதிய திசையை நோக்கிய நகர்விற்காக கோட்டாபயவை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here