பெரமுனவிற்கே ஆதரவு; பதில் தலைவராக ரோஹன லக்ஷ்மன் நியமனம்!

இலங்கை சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (08) நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ரோஹன லக்ஷ்மன் பியதாச கட்சியின் பதில் தலைவராக தொடருவார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதஜன பெரமுனவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here