இன்று அநுராதபுரத்தில் இருந்து ஆரம்பிக்கிறார் கோட்டாபய!

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (9) தனது தேர்தல் பிரச்சாரத்தை அனுராதபுரத்தில் இருந்து தொடங்கவுள்ளார்.

அவரது முதல் அரசியல் பேரணி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் உள்ள சல்கடோ மைதானத்தில் நடைபெறும். முன்னதாக, மஹாபோதியில் வழிபாடுகளும் இடம்பெறும். இதன்போது, சு.கவுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதென முன்னர் திட்டமிடப்பட்டது.

பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள், அதன் எம்.பி.க்கள், ஸ்ரீ.ல.சு.க.வின் மக்கள் பிரதிநிதிகள், அதன் உறுப்பினர்கள் மற்றும் பலர் பேரணியில் பங்கேற்பார்கள்.

சுதந்திரக்கட்சியின் பல பிரதிநிதிகள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என, கோட்டாபய ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து நாடு முழுவதும் 26 மாவட்ட அளவிலான பேரணிகளை நடத்தப்போவதாக அவர் கூறினார்.

“நாங்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கும் செல்வோம். மாவட்ட அளவிலான கூட்டங்கள் தவிர, 138 தொகுதி பேரணிகளும் நடத்தப்படும் ”என்றார்.

பொறியியாளர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் மாநாடுகள் உட்பட தொழில் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களின் 28 கூட்டங்களில் கோட்டாபய ஏற்கனவே உரையாற்றியுள்ளார்.

“எங்கள் பிரச்சாரத்தின் முதல் கட்டம் கடந்த மாதமும், இரண்டாம் கட்டமும் கடந்த வாரம் தொடங்கியது” என்று அவர் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here