காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார்!

கம்பளையில் காணாமல் போன ஆசிரியை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மகாவலி ஆறு கலக்குமிடத்தில் இருந்து உடல் மீட்கப்பட்டுள்ளது.

நிசன்சலா ரத்நாயக்க (27) என்ற இளம் ஆசிரியையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1ம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராவில் அவரது வீடு திரும்பும் காட்சி பதிவாகியிருந்தது. குடை பிடித்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

எனினும், சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீட்டை அவர் அடைந்திருக்கவில்லை.

இது தொடர்பாக, ஆசிரியையின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். காணாமல் போன ஆசிரியை, கம்பளை பொலிஸ் நிலைய பதில் அதிகாரியொருவருடன் நிச்சயதார்த்தமும் ஆகியிருந்தார்.

இந்த நிலையில் பொலிசார் பல்வேறு கோணங்களிலும் புலன்விசாரணைணை முடுக்கி விட்டும், எந்த தடயமும் கிட்டவில்லை.

இதற்கிடையில், கண்டியில் இருந்து வத்தேகம நோக்கி செல்லும் மகாவலி ஆற்றில் இளம் பெண்ணொருவரின் உடல் மிதப்பதாக அந்த பகுதி மக்களால் தெரிவிக்கப்படும் தகவல் மீது பொலிசார் அந்த பகுதியில் தேடுதல் நடத்தினர்.

கடற்படையின் உதவியுடன் நேற்றிரவு 10 மணியளவில் உடல் மீட்கப்பட்டது.  உயிரிழந்தவரின் உடலை தந்தையார் அடையாளம் காட்டினார்.

மரணவிசாரணையின் போது, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டதையடுத்து, கண்டி பொது வைத்தியசாலையில் நாளை பிரேத பரிசோதனை இடம்பெறும்.


தமிழ்பக்கத்தில் வெளியாகும் செய்திகளை ஜேவிபி, தமிழ்வின் உள்ளிட்ட லங்காசிறி குழும ஊடகங்கள் மீள்பிரசுரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here