யாருக்கு ஆதரவு?: தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடுகிறது!

ஜனாதிபதி தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல் நடத்தியது. எனினும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது, சஜித், கோட்டாபய தரப்புக்களுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் விபரங்களை எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்தார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி விரைவில் ஒரு முடிவிற்கு வர வேண்டுமென்றும் எம்.பிக்களிடம் கேட்டுக் கொண்டார். தாமதமாக முடிவை அறிவிப்பது, மஹிந்த அணியின் பிரச்சாரங்களிற்கு வசதியாகி விடும் என சுட்டிக்காட்டினார். கடந்த தேர்தல்களின் போது செய்ததை போல போலி ஆவணங்களை தயாரித்து, இறுதி நேர இணக்கப்பாடு இதுதான் என மக்களை ஏமாற்றுவார்கள், அது பற்றி விளக்கமளிக்க அவகாசம் போதாமல் போய்விடும் என்றார்.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைமைகள் சந்திக்கும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் விரைவில் கூடவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here