பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய புடின்!

ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது 67வது பிறந்த நாளை சைபீரியாவில் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒக்டோபர் 7ம் திகதி 1952ம் ஆண்டு பிறந்தார் புடின். இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் முந்தைய பிறந்த நாள் அனுபவத்தைவிட, 67வது பிறந்த நாளை மிகவும் நினைவுகூரும் வகையில் மிக சுவாரஸ்யமாக கொண்டாடினார்.

சைபீரியாவில் உள்ள வனப்பகுதிகளில் தனது பிறந்த நாளைக் கழித்திருக்கிறார் புடின். இதில் மலையேற்றம், காளான் உள்ளிட்ட வித்தியாசமான உணவுகளைத் தேடுதல் என அற்புதமான பயணத்தை புடின் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதிபர் புதினுக்கு அரசியல்ரீதியாக ரஷ்யாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது செல்வாக்கு வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது தனது எதிர்ப்புகளை அடக்கியாள்வதில்தான் பெரும் அக்கறை காட்டுகிறார்.

எதிர்ப்புகள் வெளியில் தெரியாமலும், எதிர்ப்பாளர்கள் செல்வாக்கு பெறாமலும் இருக்க புதின் பல தந்திரங்களைக் கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதினின் இந்தப் பயணம் விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

ஜனாதிபதி புடினுக்கு அரசியல்ரீதியாக ரஷ்யாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது செல்வாக்கு வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது தனது எதிர்ப்புகளை அடக்கியாள்வதில்தான் பெரும் அக்கறை காட்டுகிறார்.

எதிர்ப்புகள் வெளியில் தெரியாமலும், எதிர்ப்பாளர்கள் செல்வாக்கு பெறாமலும் இருக்க புடின் பல தந்திரங்களைக் கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புடினின் இந்தப் பயணம் விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here