ஆயுதபூஜை கொண்டாட ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி!

ஆயுதபூஜை கொண்டாட ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

ஆண்டுக்கொரு முறை குழந்தைகளின் குட்டி சைக்கிள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் கார், பைக் வரை மனிதனின் வாழ்வில் உயர்வுக்கு உதவும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, மாலை அணிவித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிற்கூடங்களிலும், அலுவலகங்களிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் நடந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் – பெருந்துறை சாலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஆயுதபூஜையை முன்னிட்டு ஏடிஎம் மையத்தை தண்ணீர் ஊற்றி கழுவி துடைத்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தையும் சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார். அதனால் அந்த இயந்திரம் முற்றிலும் பழுதடைந்துள்ளது.

இச்சம்பவம் மண்ண தொட்டு கும்பிடணும் படத்தில் நடிகர் செந்தில் லாரிக்கு ஆயுதபூஜை கொண்டாடிய நகைச்சுவைக் காட்சியை நமக்கு நினைவுபடுத்துகிறது. அந்தக் காட்சியில் நடிகர் செந்தில் எரியும் கற்பூரத்தை டீசல் டேங்கில் காண்பித்ததால் லாரி முற்றிலுமாக எரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here