பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தேனி மாவட்டம் குமுளியில் நடந்த படப்பிடிப்பின்போது நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தவை. அவர் தவசி படத்தில் ‘எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா’ என்று நடிகர் வடிவேலுவிடம் பேசும் ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஆனார். குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார்.

விளம்பர தயாரிப்பு உதவி மேலாளராக சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர். நடிகர் வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் பிரபல நகைச்சுவை நடிகரானார்.

நெருங்கிய நண்பர்களான நடிகர் வடிவேலு மற்றும் கிருஷ்ணமூர்த்தி இணைந்து நடித்துள்ள காட்சிகள் அதிக வரவேற்பு பெற்றன. நான், நான் கடவுள் போன்ற பல படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து கவனம் ஈர்த்திருப்பார்.

நகைச்சுவை சீன்களில் இவர் பேசும் பல வசனங்கள் இன்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம். இந்த நிலையில், கேரளாவின் குமுளி அருகே வண்டிப்பெரியாரில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here