நீங்கள் சரியாகத்தான் சாப்பிடுகிறீர்களா?

உணவுப் பழக்கத்தில், எந்தெந்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது என்ன, அன்றாடம் அதைச் சாத்தியப்படுத்துவது எப்படி?

காலை உணவை முறையாகச் சாப்பிடாதவர்கள், நாள் முழுவதும் காலை உணவு பற்றிச் சிந்திக்க வேண்டும். மனதளவில், ‘உணவை மறந்துவிட்டோமே’ என்ற குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்துங்கள். ஆரோக்கியமான அந்தக் குற்ற உணர்வு, நாளடைவில் உணவு விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும்.

உணவுப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்தும், முடியவில்லையா? நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களைக் காகிதத்தில் எழுதி, அடிக்கடி உங்கள் பார்வை படும் இடங்களில் ஒட்டிவையுங்கள். அதைப் படிக்கும்போதெல்லாம் உங்களுக்குள் உந்துதல் வரும்.

உணவுப் பழக்கத்தை மேம்படுத்த நீங்கள் முன்னெடுக்கும் விஷயங்களை நினைத்து, உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக்கொள்ளுங்கள்.

தினமும் நீங்கள் சாப்பிடும் உணவு, சாப்பிட நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம், குடிக்கும் தண்ணீரின் அளவு ஆகியவற்றைக் குறித்து வைக்க வேண்டும். வாரக் கடைசியில், நீங்களே உங்கள் உணவுப் பழக்கத்தைச் சுயபரிசோதனை செய்து, தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம்.

உண்ணும் உணவு உடலின் ஆற்றலை அதிகரித்து, ஆரோக்கியமாக வாழ உதவ வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அந்த டயட் முறையைத் தவிர்ப்பது நல்லது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here