கொழுப்பைக் கரைக்கும் கொருக்காப்புளி!

நமது வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவுக்கு புளி நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் சமையலுக்கு கொருக்காப்புளியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது உடல் எடையைக் குறைக்கும், இதயத்தைக் காக்கும், மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது.

இதற்கு, கொடம்புளி, குடம்புளி, கொக்கம்புளி, சீமை கொறுக்காய், மலபார்புளி எனப் பல பெயர்கள் உள்ளன.

கொருக்காப்புளி செரிமான உறுப்புகளைத் தூண்டி, அவற்றின் சக்தியை அதிகரிக்கும்.

உடல் எடையைக் குறைக்கும் மருந்து வகைகளில், மிக முக்கியமான மூலப் பொருளாக கொருக்காப்புளி பயன்படுத்தப்படுகிறது.

இதிலுள்ள `ஹைட்ரோக்ஸிசிட்ரிக் அசிட்’ (Hydroxycitric Acid) இதயத்தைக் காக்கக்கூடியது. அத்துடன் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

தசைகளையும் தசைநார்களையும் உறுதியாக்கி ஆற்றலை அதிகரிக்கும்; இரத்தக் கொழுப்பைக் கரைக்க உதவும்.

இதிலுள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாகத் தரப்படுகிறது.

இதன் பழத்தோலில் தயாரிக்கப்படும் ஜூஸ், வாதம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்குச் சிறந்த மருந்து.

கொருக்காப்புளியை அவ்வப்போது சமையலில் சேர்த்து வந்தால், முதுமைக் காலத்தில் ஏற்படும் மூட்டுவலி பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here