சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் ஒத்த செருப்பு

50 வது சர்வதேச திரைப்பட விழாவில் நவம்பர் 20 ம் திகதி துவங்கி, 28 ம் திகதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற உள்ளன.

இவ்விழாவில் இந்தியாவின் பல்வேறு மொழிகளை சேர்ந்த 26 படங்களும், ரிலீசாகி 50 ஆண்டுகள் ஆகும் படங்களும் திரையிடப்பட உள்ளன. இதில் தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள் திரையிடப்பட உள்ளன. மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, உயரே, கோலாம்பி, இந்தியில் உரி, கல்லி பாய், சூப்பர் 30 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.

இவ்விழாவில் சுமார் 10,000 சினிமா பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here