குடிபோதையில் விபரீதம்: யாஷிகா ஆனந்த் வந்த கார் விபரீதம்!

நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் மோதி இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரம் நள்ளிரவில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக யாஷிகா ஆனந்த் பயணம் செய்த சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து இளைஞர் மீது மோதியதுடன் அங்கிருந்த கடை ஒன்றையும் சேதப்படுத்தியது.

அப்போது காருக்குள் இருந்த யாஷிகா அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அந்த இளைஞர் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்த அனைவரும் குடிபோதையிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here