விஜயதாஸ கேட்ட பெரிய ரேற்; தலையை சுற்றிய சரவணபவன்: இனி இதுதான் தொடர்கதை!

உதயன் பத்திரிகை உரிமையாளர் எடுத்த தவறான முடிவொன்றின் விலையை இந்த நாட்களில் அனுபவிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இரகசிய மோதலை ஆரம்பித்ததால், உதயன் பத்திரிகை தொடர்பான வழக்குகளில் இருந்து விலகிக்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இனிவரும் வழக்குகளிற்கு பணம் செலுத்தி சட்டத்தரணியை தேடும் நிலைக்கு சரவணபவன் எம்.பி ஆளாகியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவினால் உதயன் பத்திரிகை மீது நான்கு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றிற்கு ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், அண்மையில் ஒன்றிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கு விசாரணையிலும், இன்னொன்று மேன்முறையீட்டிலும் உள்ளன. இந்த வழக்குகளிற்காக உதயன் சார்பில் ஆஜரானவர் எம்.ஏ.சுமந்திரன்.

உதயன் மீது வழக்கு தொடுக்கப்பட்டதும், முதலில் விஜயதாஸ ராஜபக்சவையே சட்டத்தரணியாக சரவணபவன் நியமித்தார். எனினும், அவர் முதலாவது தவணை முடிவில் பணம் கேட்டபோது, உதயன் நிர்வாகம் வெலவெலத்திருந்தது. இவ்வளவு பெருந்தொகை பணம் வழங்குவதென்றால், எங்கே செல்வதென தலையை பிய்த்துக் கொண்டிருந்த பின்னர்தான், எம்.ஏ.சுமந்திரனிடம் சென்றிருந்தார் சரவணபவன்.

வழக்கு தொடர்பாக பேசியபோது, அதற்கான கட்டணத்தையும் (விஜயதாஸ விசயத்தில் நடந்ததைபோல நடக்ககூடாதென்பதற்காக) சரவணபவன் கேட்டார். எனினும், பணம் தேவையில்லையென சுமந்திரன் கூறியிருந்தார்.

உதயனிற்காக இலவசமாக தொடர்ந்து வழக்கு விசாரணையில் சுமந்திரன் ஆஜராகும்போதும், அடிக்கடி சுமந்திரனை சீண்டும் விதமான உதயன் நடந்து கொண்டிருந்தது. இது குறித்து சுமந்திரன் நேரடியாகவே சரவணபவனிடம் கூறியிருந்தார்.

இதன் உச்சகட்டமாகவே, சுமந்திரன் கட்சியின் அனுமதியின்றி விசயங்களை வெளியில் சொல்லக்கூடாதென்ற பிரேரணையை நிறைவேற்ற சரவணபவன் முயற்சித்தார்.

இதனால் கடுமையான அதிருப்தியடைந்துள்ள சுமந்திரன், இனிவரும் நாட்களில் உதயன் வழக்குகளில் ஆஜராகுவதில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

இனிமேல், உதயன் நிறுவனம் தனது வழக்கிற்கு பணம் கொடுத்து சட்டத்தரணியை தேடும் நிலையேற்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here