இந்தவார ராசி பலன்கள் (29.9.2019- 5.10.2019)

 

சூரியன், செவ்வாய், ராகு, சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். உறவினர்களின் எதிர்பாராத உதவி ஊக்கம் தரும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்து கூடும். வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாகும்.

புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று கொள்வர். பூர்வசொத்தில் கிடைக்கின்ற பணவரவு அதிகரிக்கும். நோய் தொந்தரவு குறையும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பெருந்தன்மை குணம் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டியை மாற்று உபாயத்தால் சரி செய்யவும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 2.10.19 பகல் 12:52 மணி – 4.10.19 மாலை 6:21 மணி
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல வளமும் தரும்.

சுக்கிரன், புதன், குரு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். சமூக நடப்பில் புதிய அனுபவம் பெறுவீர்கள். பேச்சும், செயலும் பரிமளிக்கும்.

வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் அறிவு, செயல் திறனில் மேம்படுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பண கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். மனைவியின் நற்செயல்கள் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரம் கடின உழைப்பால் செழிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் புதிய முயற்சி மேற்கொள்வர்.

சந்திராஷ்டமம்: 4.10.19 மாலை 6:22 மணி – 5.10.19 நாள் முழுவதும்.
பரிகாரம் : முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சுக்கிரன், சந்திரன் ஓரளவு நற்பலன் வழங்குவர். வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுவீர்கள். உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் கவனம் வேண்டும். வாகன பராமரிப்பு பயணத்தை இனிதாக உருவாக்கும்.

புத்திரரின் எண்ணங்களை புரிந்து கொண்டு அவர்களின் செயல்களில் மாற்றம் வர உதவுங்கள். குடும்பத்திற்கான பண செலவு அதிகரிக்கும். நோய் தொந்தரவு குறைய மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழிலில் புதிய உத்தியால் உற்பத்தி, விற்பனை கூடும். பணியாளர்கள் பணி திறனில் மேம்படுவர். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

பரிகாரம் : பசு வழிபாடு சகல வளமும் தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அதிர்ஷ்டகரமான பலன் வழங்குவர். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.

புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். பண கடன் தொந்தரவு குறையும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பண வரவும் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து பரிசு, பாராட்டு பெறுவர். பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தில் மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.

ராகு, சுக்கிரன், சந்திரன் தாராள நற்பலன் வழங்குவர். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். முக்கியமான பணிகள் எளிதில் நிறைவேறும்.

வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல்களை தயக்கமுடன் ஏற்று கொள்வர். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழிலில் சில மாற்றம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணிபுரிவர். பெண்கள் பண செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் கொள்ளவும்.
பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

சந்திரன், சுக்கிரனால் ஓரளவு நன்மை கிடைக்கும். நீங்கள் பேசும் வார்த்தை வசீகரமாகும். சமூக நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.

வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர்கள் படிப்பு, வேலையில் முன்னேற நல்வழி பிறக்கும். சொத்தின் பேரில் பணம் கடன் பெற வேண்டாம். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் சராசரி பண வரவு உண்டு. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.

குரு, சுக்கிரன், சனீஸ்வரர், கேது ராஜயோக பலன் தருவர். புதியவர்களின் நட்பு மனதில் புத்துணர்வு தரும். செயல்கள் சிறப்பாக அமையும். தாய் வழி உறவினர்களின் நற்செயல் மகிழ்ச்சி தரும்.

புதிய வீடு, வாகனம் திட்டமிட்டபடி வாங்கலாம். புத்திரரின் எதிர்கால நலன் சிறக்க தேவையான பணி புரிவீர்கள். பூர்வ சொத்தில் பெறுகின்ற பணவரவு அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர் உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து ஆதாய பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றியளிக்கும்.

சூரியன், செவ்வாய், சுக்கிரன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். புதியவர்களின் அன்பு, பாசம் கிடைக்கும்.

பணிகளில் முன்னேற்றம் உருவாகும். வெளியூர் பயணம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும். புத்திரர் பெற்றோரின் வார்த்தையை மன பூர்வமாக ஏற்று கொள்வர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவியின் பேச்சு, செயலில் புதிய பரிமளிப்பு ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். நிலுவை பணம் வசூலாகும். பணியாளர்கள் மன நிறைவுடன் பணிபுரிவர். சலுகை கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சூரியன், புதன், சந்திரன் அனுகூல பலன் வழங்குவர். இஷ்ட தெய்வ அருளால் புதிய திட்டம் நிறைவேறும்.
உறவினர்கள் அன்பு, பாசத்துடன் பழகுவர். வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். புத்திரர் திறமை மிகுந்த செயல் புரிந்திட உதவுவீர்கள். பூர்வ சொத்து பராமரிப்பில் அதிக கவனம் வேண்டும். எதிர்ப்பாளரிடம் சமயோசிதமாக விலகுவது நல்லது. மனைவியின் நல்ல ஆலோசனை உங்கள் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து நற்பெயர் பெறுவர்.
பரிகாரம் : அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புதன், குரு, சுக்கிரன், ராகு அளப்பரிய நற்பலன் வழங்குவர். மனதில் உத்வேகம் பிறக்கும். செயல்களில் இருந்த தாமதம் விலகும்.

தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவை பணம் வரவாகும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் அறிவார்ந்த செயல் குடும்ப நலன் சிறக்க உதவும். தொழிலில் அரசு உதவி பெற புதியவர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

கேது, சுக்கிரன், சனீஸ்வரர், சந்திரன் அனுகூலமாக உள்ளனர். மனதில் தைரியம் வளரும். தம்பி, தங்கை அதிக அன்பு பாராட்டுவர்.

வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் செயல்களில் உருவாகின்ற குளறுபடியை இதமாக சரி செய்வீர்கள். உறவினர் வீட்டு விருந்து, விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வீர்கள். பண கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிள்ளைகள் நலன்களை பாதுகாத்திடுவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம் : 29.9.19 காலை 6:00 மணி – 30.9.19 காலை 7:54 மணி
பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

புதன், குரு, சந்திரனால் ஓரளவு நன்மை உருவாகும். நேர்மை வழியில் செயல்படுவீர்கள்.

அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் ஆடம்பர செயல்களில் ஆர்வம் கொள்வர். நோய் தொந்தரவு மருத்துவ சிகிச்கையால் குறையும். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கையை பாதுகாத்திடுங்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் அனுகூல சூழல் இருக்கும். பெண்கள் ஆடம்பர பண செலவு தவிர்க்கவும். மாணவர்கள் புதிய உத்திகளை பின்பற்றி படிப்பில் முன்னேறுவர்.
சந்திராஷ்டமம் : 30.9.19 காலை 7:55 மணி – 2.10.19 பகல் 12:51 மணி
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here