மனைவி பாசத்தில் மலிங்கவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாதா?: காரணம் உள்ளே!


உலகத்தில் இன்று டட்டூ வரைவது மிகப்பெரிய பஷன் ஆகி விட்டது.

உடலில் விதம்விதமான உருவங்களை டட்டூவாக வரைகிறார்கள். உடல் முழுவதும் டட்டூ வரைபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இலங்கையில்டட்டூ வரைவது அரிதான விசயமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. யாழ்ப்பாணத்திலேயே டட்டூ வரையும் இடங்கள் உள்ளன. பெண்களும் தாராளமாக டட்டூ வரைகிறார்கள்.

இலங்கை பிரபலங்களில் டட்டூவில் அதீத அக்கறை காண்பிப்பவர் லசித் மலிங்க. இலங்கை ரி20 அணியின் தலைவராக மலிங்கவின் தலைமுடி ஸ்டைலை போலவே, டட்டூவினாலும் கவனிக்கப்படுபவர்.

அவர் இப்போது லேட்டஸ்டாக வரைந்துள்ள டட்டூ, தனது மனைவி பிள்ளைகளை. மலிங்கலின் இடது கையில் இந்த புதிய டட்டூ இப்போது வரையப்பட்டுள்ளது.

மனைவி, இரண்டு பிள்ளைகளின் படங்களுடன் அவர்கள் பிறந்த நாளையும் டட்டூவாக வரைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here