நீராவியடியில் பிக்கு தகனத்தின் பின்னணி யார்… இவர் எதற்காக முல்லைத்தீவு வந்தார்?

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்ட விவகாரம், இன்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவா?… அது ஒரு பக்கம் இருக்கட்டுமென, சட்டத்தை காலடியில் மிதித்து, இந்த அடாவடியில் முன்னின்றவர் பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

பிக்குவின் உடலை தகனம் செய்வது பற்றிய வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சென்றார் ஞானசாரர். நீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருந்தாலும் இருக்கட்டும், நாம் உடலை தகனம் செய்யப் போகிறோம் என அவர் கூறிவிட்டு சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். இதன்பின்னரே, நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி உடலை தகனம் செய்ய முயற்சி நடப்பதாக செய்தி பரவியது.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே, நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, உடலை தகனம் செய்ய ஏற்பாடு என கேள்விக்குறியிட்டு, தமிழ் பக்கம் அந்த விவகாரத்தை செய்தியாக்கியதும், நீதிமன்ற வளாகத்தில் கூறப்பட்ட அந்த தகவலை அடிப்படையாக கொண்டே.

நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, ஞானசாரர் அப்படி நடந்தது, ஏதாவது பின்னணியின் அடிப்படையிலா என்ற கேள்வியும் உள்ளது. ஏனெனில், ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதாவது இனவன்முறையை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியா என்ற கேள்வியும் உள்ளது.

அப்படியானால், இதன் பின்னணியில் யார் இருப்பார்கள்?

இது ஆழமாக அவதானம் செலுத்த வேண்டிய விவகாரம்.

ஆனால், முல்லைத்தீவில் இவ்வளவு ரணகளம் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ்பக்க செய்தியாளரின் கமராவில் ஒரு காட்சி சிக்கியது. அந்த காட்சியில் சிக்கிய மனிதர் எதற்காக முல்லைத்தீவிற்கு வந்தார்?

அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஜகத் சுமதிபால.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமாதிபாலவின் சகோதரர் ஜகத் சுமதிபாலவே அவர்.

பொதுபலசேனவை நீண்டகாலமாக போஷித்து வருபவராக ஜகத் அறியப்படுகிறார். பௌத்த மத நலன்கள் தொடர்புடைய சங்கத்தின் தலைவராகவும் செயற்படுகிறார்.

எனினும், எதற்காக முல்லைத்தீவு வந்தார்?

புத்த பிக்குவின் உடல் எரித்த விவகாரத்தில் கருவி மட்டுமே ஞானசாரர்… பின்னணியில் உள்ள பலமான கரங்கள் வேறு ஏதுமா?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here