முல்லைத்தீவிற்கு வந்தார் ஞானசார தேரர்!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையில், உயிரிழந்த பிக்குவின் உடலை அடக்கம் செய்ய கோரும் விவகாரம் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வந்தனர்.

பின்னர், நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் சட்டத்தரணிகள் மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here