காதலில் தோற்றதும் காதலியின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றுவதே இலங்கையர்களின் முதல் வேலை: ஆய்வில் தகவல்!

குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு 2017ம் ஆண்டு கிடைத்த முறைப்பாடுகளின்படி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமான குற்றங்களே அதிகளவில் பதிவாகியுள்ளது.

அந்த ஆண்டில் கிடைத்த சமூக ஊடகங்கள் தொடர்பான முறைப்பாடுகளில் 70 வீதமான முறைப்பாடுகள், இளவயதினருக்கிடையிலான காதல் முறிந்த பின்னர் சமூக ஊடகங்கள் வழியாக புகைப்படம், வீடியோ, உரையாடல்களை வெளியிட்டது தொடர்பானவையே.

அண்மையில் கொழும்பில் நடந்த இளைஞர், யுவதிகளிற்கான பயிற்சி நிகழ்வொன்றில் உரையாற்றிய,  குழந்தை மற்றும் இளம்பருவ மனநல மருத்துவர் வைத்தியர் ஹெவகீகன இதனை தெரிவித்தார்.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக 20 சதவீத முறைப்பாடுகளும், ஹக்கிங், மிரட்டல் தொடர்பாக தலா 5 சதவீத முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளில் 33 சதவீதம் பெண்கள், 67 சதவீதம் ஆண்கள் ஆவர்.

இணைய அடிமையாதல் மூளை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது என்று ஹெவகீகன சுட்டிக்காட்டினார். சில சந்தர்ப்பங்களில், ஒன்லைன் போதைக்கு அடிமையானவர்களின் மூளையில் பல சிறிய பகுதிகள் 10 முதல் 20 சதவீதம் வரை சுருங்கிவிட்டன. மனச்சோர்வு, கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ஏ.டி.எச்.டி) மற்றும் பிற சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here