இந்தவார ராசி பலன்கள் (22.9.2019 – 28.9.2019)

சூரியன், ராகு, சந்திரன் நற்பலன் தருவர். சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்து கொள்வீர்கள்.

தாய்வழி உறவினர்களின் உதவி நெகிழ்ச்சியை தரும். புத்திரரின் செயல்களை ஒழுங்கு செய்வதால் படிப்பு, வேலையில் முன்னேறுவர். மருத்துவ சிகிச்சையால் நோய் தொந்தரவு குறையும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். தொழில் வளர்ச்சி பெற்று பணவரவு செழிக்கும். அரசு உதவியும் பெறலாம். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் குடும்ப நலன்களை அக்கறையுடன் பேணுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண் பெறுவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

புதன், குரு, சுக்கிரன், சந்திரனால் அளப்பரிய நன்மை உண்டாகும். பழகுபவர்களின் மனம் உணர்ந்து இதமாக பேசுவீர்கள்.

புதிய வீடு வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர் உங்கள் அறிவுரையை உணர்ந்து செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விவகாரங்களில் அனுகூல தீர்வு கிடைக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து கலைகளும் பயில்வர்.
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

செவ்வாய், சுக்கிரன், சந்திரன் வியத்தகு நற்பலன் வழங்குவர். உங்களின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். தம்பி, தங்கையின் தேவைக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்ளவும். புத்திரின் செயல் குறையை சரி செய்து நம்பிக்கை தருவீர்கள். அதனால் உற்சாகமுடன் படித்து முன்னேற்றம் காண்பர். விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு நிறைந்த பாசத்தில் மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமயோசிதமாக சரி செய்வீர்கள். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்படுவர். சலுகையும் கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற சக மாணவர் உதவுவர்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

பெரும்பான்மை கிரகங்களால் ராஜயோக பலன் கிடைக்கும். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பணிகள் சமயோசித செயலால் எளிதில் நிறைவேறும்.

தாயின் அன்பு, ஆசி நல்வழி நடத்தும். வெளியூர் பயணங்களில் இனிய அனுபவம் கிடைக்கும். புத்திரர் உங்கள் சொல்லை ஏற்று திறமையை வளர்த்து கொள்வர். வழக்கு, விவகாரங்களில் இதமான அணுகுமுறை வெற்றியை தரும். மனைவி அன்பு, பாசத்துடன் உதவுவார். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் பண பரிவர்த்தனை அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற்றி சலுகை பெறுவர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

ராகு, சுக்கிரன், சந்திரனால் பல்வேறு நன்மை கிடைக்கும். திட்டமிட்ட செயல்கள் சிறப்பாக நிறைவேறும்.

உடன் பிறந்தவர்களின் உதவி உண்டு. வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். புத்திரரின் படிப்பு, வேலையில் தாமதம் ஏற்படலாம். பூர்வசொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்தவும். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல கூடாது.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். உங்கள் செயல் திறனை வளர்த்து கொள்வது அவசியம்.

எதிர்பாராத வகையில் சில உதவி கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். புத்திரர் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்வார். எதிரி மறைமுகமாக தொந்தரவு தருவார். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அளவுடன் இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் உறுதியுடன் பணிபுரிவீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதால் பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். புத்திரர் நல்ல செயல்களால் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். எதிர்ப்பாளர் சொந்த பணிகளில் கவனம் கொள்வர். மனைவி குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். பணவரவில் லாபம் கூடும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் பயன்படுத்துவர். பெண்கள் தாராள பண வரவில் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் ஞாபக திறன் வளர்ந்து படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம்: மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர்.,குடும்பத்திற்கான பண தேவை திருப்திகர அளவில் கிடைக்கும்.

தம்பி, தங்கை சொந்த பணிகளில் கவனம் கொள்வர். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரரிடம் அதிருப்தி எண்ணங்கள் விலகி பாசம் கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்க மாற்று வழிகளை தேடுவீர்கள். மனைவியின் கருத்துகளை ஏற்று கொள்வீர்கள். தொழிலில் உள்ள அனுகூலங்களை பாதுகாத்து கொள்வீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு தேவையான உதவியை வழங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வர்.
சந்திராஷ்டமம்: 22.9.19 காலை 6:00 மணி – 23.9.19 இரவு 1:08 மணி
பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

சூரியன், புதன், சந்திரன் ஆதாய பலன் வழங்குவர். முன்னேற்ற பாதையில் நடை போடுவீர்கள். உங்களை இகழ்ந்து பேசியவரும் அன்பு பாராட்டுவர்.

புதிய வீடு, வாகனம் விரும்பியபடி வாங்கலாம். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு நடந்து பெருமை சேர்ப்பர். குடும்பத்திற்கான பண செலவுகளில் தாராளம் இருக்கும். ஒவ்வாத உணவு உண்ண கூடாது. மனைவி வழி சார்ந்த உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் புதிய உத்தியால் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் பணி திறனில் மேம்படுவர். பெண்கள் பண செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

ராகு, சுக்கிரன், புதன், குரு அதிர்ஷ்டகரமான பலன் தருவர். நண்பரின் ஆலோசனை மனதில் நம்பிக்கையை தரும்.

குடும்பத்தின் எதிர் கால வாழ்வுக்கு தேவையானதை செய்வீர்கள். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் தாராள பண செலவில் வாங்கி தருவீர்கள். எதிரியால் உருவான நெருக்கடி பலமிழக்கும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தில் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் ஆசிரியரின் நன் மதிப்பை பெறுவர்.
சந்திராஷ்டமம்: 26.9.19 அதிகாலை 4:17 மணி – 28.9.19 காலை 6:37 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு தொழிலில் வளர்ச்சியை தரும்.

சுக்கிரன், கேது, சனீஸ்வரர் சந்திரனால் நற்பலன் கிடைக்கும். உங்களின் சிறு பணியும் நேர்த்தியாக அமையும்.

தாய்வழி உறவினர்கள் மதித்து சொந்தம் பாராட்டுவர். புத்திரர் பெற்றோரிடம் தமது விருப்பங்களை நிறைவேற்ற சொல்வர். குடும்ப செலவுக்கான பணம் தாராளமாக கிடைக்கும். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். வீட்டில் ஒற்றுமை நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். நிலுவை பணம் வசூலாகும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம்: 28.9.19 காலை 6:38 மணி – நாள் முழுவதும்
பரிகாரம்: சிவன் வழிபாடு வெற்றியளிக்கும்.

செவ்வாய், புதன், குரு, சந்திரன் அனுகூல பலன் தருவர். சமூக நிகழ்வுகள் இனிய அனுபவம் தரும். தாமதமான பணி புதிய முயற்சியால் நிறைவேறும்.

புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் அறிவு, செயல் திறனில் மேம்பட ஊக்கம் தருவீர்கள். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் பிறருக்காக பண பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here