கல்முனையில் பெரமுனவின் தேர்தல் பிரசார அலுவலகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை நகரில் பிரதான தேர்தல் பிரசார காரியாலயம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (20) முற்பகல் 11 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்கட்சி காரியாலயத்தினை மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேருகொட மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.இதன் போது அதிகளவான சிங்கள, முஸ்லீம் மக்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கருத்து தெரிவித்த அதிதிகள் கோத்தபாய ஜனாதிபதி ஆனால் நாட்டின் நிர்வாக கட்டமைப்பு சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.சிலர் தனது சுயநலத்திற்காக உண்மையை மறைக்க முடியாது. எமது மக்கள் தெளிவடைந்துள்ளார்கள் என்பதை எதிர்கால தேர்தலில் உணர்த்துவார்கள் என குறிப்பிட்டனர். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் பிரதான கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக முதலாவது தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here