செல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கைவரிசை

தமிழகத்தில் காரைக்குடி உட்பட 20 இடங்களில் செல்பி எடுத்து வியாபாரிகளிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஜோடியை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை வாட்டர்டேங் அருகே கருப்பையா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரது கடைக்கு தம்பதிபோல தோற்ற மளித்த வெளிநாட்டைச் சேர்ந்த ஆண், பெண் வந்துள்ளனர். அந்த நபர் கடையின் பணிப்பெண்ணிடம் ‘சி’ சீரியல் உள்ள 2 ஆயிரம் ருபாய் நோட்டு இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அந்த பணிப்பெண் இல்லை என்று கூறியும், அவர் விடாப்பிடியாக வற்புறுத்தியதால், 500 ரூபாய் நோட்டுகளே இருப்ப தாகக் கூறி, அவற்றை காட்டி உள்ளார். 500 ரூபாய் நோட்டுகளில் ‘சி’ சீரியல் இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி, அந்த நோட்ட களை அந்நபர் வாங்கி பார்த்துள்ளார். அப்போது ரூ.6 ஆயி பணிப்பெண்ணுக்குத் தெரியாமல் அவர் திருடி உள்ளார்.

அதே சமயத்தில், அந்த வெளிநாட்டு நபருடன் வந்த பெண், அங்கிருப்போரை திசை திருப்ப பணியாளர்கள், வாடிக்கையாளர்களுடன் செல்பி எடுத்து கொண்டே இருந்தார்.

பணத்தை திருடியது குறித்து அந்த நபர் சமிக்ஞை காட்டியதும், இருவரும் அங்கிருந்து விரைவாக புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்ற பிறகுதான் ரூ.6 ஆயிரம் மாயமானது பணிப் பெண்ணுக்கு தெரியவந்தது. வெளி நாட்டு நபர் திருடும் காட்சி ‘சிசிடிவி கேமராவிலும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

இதேபோல அந்த வெளிநாட்டு ஜோடி, கடந்த செப்.13-ம் தேதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை யில் உள்ள பல்பொருள் அங்காடியில் ரூ.30 ஆயிரத்தைத் திருடி உள்ளது. காரைக்குடியைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பாத்திரக்கடை, தாழனூர், மணலூர் பெட்ரோல் பங்குகளிலும் கைவரிசை காட்டி இருக்கிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் ஜோடியாகச் சென்று கைவரிசை காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் உருவம் ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகி உள்ளதால், அவர்களை பிடிக்க போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காரைக்குடியைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பாத்திரக்கடை, தாழனூர், மணலூர் பெட்ரோல் பங்குகளிலும் வெளிநாட்டு ஜோடி கைவரிசை காட்டி உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here