‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி!

சஜித்தான் வெற்றி வேட்பாளர் என்றால், என்னை விட்டுவிட்டு நீங்கள் அனைவரும் கூட்டாக போட்டியிட்டு வெற்றிபெறுங்கள் என தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும்படி நேற்று வலியுறுத்திய அமைச்சர்கள் மனோ கணேசன், பழநி திகாம்பரம்  ஆகியோரிடமே இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. இதன்பின்னர் மனோ கணேசனும், திகாம்பரமும் தனிமையில் ரணிலை சந்தித்து பேசினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் நீங்கள் நீடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பிரதமராக உங்களை நியமிப்பதற்கான உத்தரவாதத்தை பங்காளி கட்சிகளான வழங்குவதற்கு தயாராக உள்ளோம் என்று அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கவில் கூட எல்லோரும் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டுமென விரும்புகிறார்கள். இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் நாம் வெற்றிபெறலாமென நம்புகிறார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தபோது, கடும் அதிருப்தியடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “என்னை விட்டுவிட்டு நீங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்“ என்று பிரதமர்  தெரிவித்துள்ளார்.

இதேவிடயத்தை மனோ மீண்டும் தெளிவுபடுத்தியபோதும், அதே பதிலையே இரண்டாம் முறையாகவும் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடல் இடத்திற்கு வந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க? அமைச்சர் ரவூப் ஹக்கீம்தான் உங்கள் அனைவரையும் தவறாக வழி நடத்துகிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை அமைச்சர் மனோ மறுத்து, தகவல்களின் அடிப்படையிலேயே நிறைவேற்றதிகார ஒழிப்பில் உணர்வுபூர்வமாக ஹக்கீம் தகவல்களை தெரிவித்தார். அதற்கான சூழலை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்திப்பு சுமுகமற்ற நிலையில் முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here