483 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனிவீடுகளுக்கான 483 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட அமைச்சர்கள் பி. திகாம்பரம், வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.உதயகுமார், எஸ்.ஸ்ரீதரன், எம்.ராம், நகரசபை உறுப்பினர் டாக்டர் ஏ.நந்தகுமார், பிரதேசசபை உறுப்பினர்கள் பா.சிவநேசன், வீ.சிவானந்தன், மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், உபதலைவர் ஆர்.இராஜமாணிக்கம், தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் மற்றும் அமைச்சரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், காணி அமைச்சின் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீடுகளின் பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அதில் மற்றுமொரு கட்ட காணி உறுதிப் பத்திரங்கள் இன்று வழங்கப்படவுள்ளது.

இதில் ராகலை, லக்கிலேன்ட், மஹாஊவா, கோட்லொஜ், க்லெசோ, டெஸ்போர்ட், கிளரன்டன், தங்ககலை, கல்மதுரா, டோரிங்டன், ஆட்லோ, டயகாமம் இல 01, டயகாமம் மேற்கு, ராணிவத்தை, குட்டிமலை, ஹொலிரூட், மடக்கும்பரை, டன்சினன், சீன், வெதமுல்ல, ரொசிட்டா, மேபீல்ட், டிக்கோயா, டன்பார், பீரட், போட்ரி, சென்.ஜொன் டில்லரி, பொகவான ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு காணி உரித்து வழங்கி வைக்கப்பட்டது.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு சொந்த நிலத்தில் சொந்த வீடு என்ற கருத் திட்டத்தின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஏழு பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வருவதோடு அந்த வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு மலையக வரலாற்றில் முதன்முறையாக காணி உரித்து வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here