அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், உலகிலேயே அதிக மக்களால் பேசப் படும் மொழிகளை பாடசாலைப் பாடத் திட்டத்தில் 2வது மொழியாகச் சேர்த்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது தமிழ் மொழியை, முதல் வகுப்பில் இருந்து பயிற்றுவிக்க நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் பாடசாலைகளில் 2வது பயிற்று மொழியாக தமிழ் மொழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத் திட்டத்தையும் மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் தமிழ் தவிர இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மற்றும் மாசிடோனியா ஆகிய 5 மொழி கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம், நியூ சவுத் வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் 2வதாகப் பயிற்றுவிக்கப்படும் மொழிகளின் எண்ணிக்கை 69 ஆக உயரும்.

இதுகுறித்து மக்கள்தொகை புள்ளிவிவர அதிகாரி பெர்னார்ட் சால்ட் கூறும்போது, ‘‘அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிப்பவர்களில் 39 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அவர்களுடைய வசதிக்காக பாடசாலைகளில் தமிழ் உட் பட 2வது மொழிகளை கூடுதலாக சேர்த்தது, அவுஸ்திரேலியாவின் நவீனகால சமூகத்தை பிரதிபலிப்ப தாக உள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘டார்சி ரோட் பப்ளிக் பாடசாலை மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழையும் படிக்க முடியும். உலகளவில் வேலைவாய்ப்புகள் பெருகி வரும் சூழ்நிலையில், பல்வேறு மொழிகளில் பேசும் திறன் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியம்’’

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here