வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

வோஷிங்டன் நகரின் வடபகுதியில் வெள்ளை மாளிகையில் இருந்து 3 கி.மீ தொலைவில் கொலம்பியா ஹைய்ட் எனும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் திடீரென ஒருவர் வீதியில் சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் தப்பி ஓடினார். பொலிஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், “வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடப்பதாகத் தகவல் வந்தது. அங்கு வந்தபோது, 6 பேர் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரையும் அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here