திறப்பு விழா நடந்து பல வாரம்: இயங்காத குணமாக்கல் சிகிச்சை பிரிவு… நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புத்தம்புது அம்யூலன்ஸ்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது, மின்னல் வேகத்தில் சுழன்று பல இடங்களில் அடிக்கல் நாட்டியதுடன், பல கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

அப்போது திறக்கப்பட்ட கட்டடங்களில் ஒன்று, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குணமாக்கல் நிலையம்.

கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டு விட்டது. எனினும், அது இன்னும் பாவனைக்கு விடப்படவில்லை.

இதேவேளை, வைத்தியசாலைக்கு நவீன நோயாளர் காவு வண்டியொன்றும் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. அதுவும், பாவிக்கப்படாமல் பத்திரமாக, திறக்கப்படாத அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து, யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுப்பும் நடைமுறை குறித்த விமர்சனங்கள் உள்ளன. அதிக நோயாளர் சேர்ந்த பின்னர், நோயாளர் காவு வண்டியொன்றில் நெருக்கடியாக ஏற்றிச் செல்வதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், புதிதாக வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டியை இயக்காமல் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குணமாக்கல் பிரிவு திறக்கப்படாதமைக்கு, உரிய தாதிய உத்தியோகத்தரின்மையே காரணமென வடக்கு சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here