8000 இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 16 வருட சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட அக்கரைப்பற்று கமநல சேவைகள் நிலையத்தின் முன்னாள் கமநல அபிவிருத்தி அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கொழும்பு மேல் நீதிமன்றம்.

20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இன்னொருவரான, இதே கமநல அபிவிருத்தி நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் எழுதுவினைஞருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2015 செப்டெம்பர் மாதம் 6ம் திகதியன்று, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு வயல் ஒன்றிற்கான உரிமத்தை பெற்றுக் கொடுப்பதற்காக 8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் இரண்டு பேருக்கும் எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here