முறையற்ற பந்துவீச்சு: அகில தனஞ்சயவிற்கு ஓராண்டு தடை!

முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி தடை விதித்துள்ளது.

2020ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ம் திகதி வரை அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

நியூஸிலாந்துக்கு எதிரான காலி டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி சந்தேகமானது என நடுவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, 14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி தொடர்பில் பரிசோதனை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 28ம் திகதி இந்தியாவுக்கு சென்று, சென்னையிலுள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.

பரிதோதனை முடிவுகளில், அகில தனஞ்சயவின் பந்து வீச்சானது முறையற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here