யாழ் சிறுமி இன்று இரண்டாவது தடவையாக உயிர்தெழுந்தார்: மரணச்சடங்கு நிறுத்தப்பட்டு வைத்தியசாலையில் சேர்கப்பட்டார்!

இறந்து விட்டதாக கூறப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தையின் உடலிலிருந்து மலம், சலம் வெளியேறியதால், அந்த குழந்தையின் பெற்றோர் தேவாலயத்திற்கு தூக்கிக் கொண்டு ஓடிச் சென்று நடத்திய பாசப்போராட்டம் பற்றிய செய்தியை இன்று காலையில் தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, குழந்தை உயிருடன் இருப்பதாக கருதப்படுவதால், இரண்டாவது தடவையாக இறுதிச் சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டு, குழந்தை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் இந்த பாசப்போராட்டம் நடந்து வருகிறது.

குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் புதன்கிழமை(06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை சங்குவேலியிலுள்ள குழந்தையின் வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்தன. அந்த சமயத்தில், நண்பகல் 11.45 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன.

அத்துடன் குழந்தை உயிருடன் இருப்பதற்காக அறிகுறி தென்படுவதாக பலரும் கூறினார்.

இதனையடுத்துக் குழந்தை உயிருடனிருப்பதாகக் கருதப்பட்டு உரும்பிராயிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்கும், உடுவில் பகுதியிலுள்ள தேவாலயமொன்றுக்கும் எடுத்துச் சென்ற உறவினர்கள் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமையால் குழந்தையின் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டது. பின்னர், குழந்தை இறந்து விட்டதென உள்ளூர் பிரமுகர்கள், பெற்றோரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து இன்று முற்பகல் இறுதிக்கிரியை நடக்கயிருந்தது.

இந்தநிலையில் இன்று காலையில் குழந்தையின் வலது கையை தொட்டுப்பார்த்த உறவினரான இளம்பெண்ணொருவர், குழந்தையில் சூடு காணப்படுவதாக தெரிவித்தார். இதனால் மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

குழந்தையை ஏந்தி வைத்திருந்த தந்தையார், குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாக கூறினார்.

இதையடுத்து இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியிலிருந்து குழந்தை தனியாகத் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதன் போது குறித்த குழந்தையின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டதாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த குழந்தையின் உடலிலிருந்து சிறுநீர் வெளியேறியுள்ளதுடன் உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது. அத்துடன் குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆகின்ற போதிலும் குழந்தை உயிரோடு இருப்பதற்காக அறிகுறிகள் தென்பட்டபடியிருக்கிறது.

இதனால், குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்துக் குழந்தை உயிருடன் மீண்டு வருவாள் என்ற மாறாத நம்பிக்கையில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இடைவிடாது வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இன்று தனியார் வைத்தியசாலையொன்றில் குழந்தையை அனுமதித்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here