ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் மூவர் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று பேர் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயாதீன கட்சி வேட்பாளரான ஜயந்த கெடகொட, இலங்கை சோசலிச கட்சியின் வேட்பாளர் சமூகவியலாளரான பேராசிரியர் அஜந்தா பெரேரா மற்றும் சுயாதீன கட்சி வேட்பாளர் சிறிபால அமரசிங்க ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று (19) ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் கையேற்றல் எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி மதியம் 12.00 வரை இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், 18 கட்சிகள் மற்றும் குழுக்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலை முன்னணி அனுர குமார திஸாநாயக்கவையும், முன்னிலை சோஷலிசக் கட்சி துமிந்த நாகமுவவையும் வேட்பாளராக பெயரிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடாத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (18) வெளியிடப்பட்டது.

அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here