இன்ஜின் ஓயிலில் இத்தனை விசயமா! 02

இன்ஜின் ஓயில் வகைகள்!

சென்ற இதழில், ஓயில் செயல்பாட்டை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடீட்டிவ்களைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இன்ஜின் ஓயில் வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்!

மினரல் ஓயில் – இந்த வகை ஓயில்தான், இலங்கையில் உள்ள கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் இன்ஜினில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், இலங்கை பருவநிலைக்கு ஏற்ற ஓயில் இதுதான். சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் ஓயிலைத்தான், மினரல் ஓயில் என நாம் அழைக்கின்றோம். இன்ஜின் திறன், வாகனப் பயன்பாட்டுக்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டு, பலவிதமான ஓயில் கிரேட்களில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை குறைவு என்பது பெரிய ப்ளஸ்.

செமி சிந்தடிக் ஓயில் – மினரல் ஓயிலும், சிந்தடிக் ஓயிலும் கலந்த கலவைதான் செமி சிந்தடிக் ஓயில்; இவற்றில் 70 முதல் 75 சதவிகிதம் மினரல் ஓயிலும், 25 முதல் 30 சதவிகிதம் சிந்தடிக் ஓயிலும் இருக்கும். இன்ஜின் அதிக வெப்பநிலையை எட்டும்போது, ஓயில் தனது மசகுத்தன்மையை இழக்காமல் இருக்கவும், குறைவான வெப்பநிலையின்போது ஓயில் ஃபிலிம் நீடித்து இருக்கவும் உருவானதே செமி சிந்தடிக் ஓயில். இதில் பெரும்பங்கு மினரல் ஓயில்தான் என்பதால், அதனுடன் ஒப்பிடும்போது இதன் விலை கொஞ்சம்தான் அதிகம்; ஆனால், அதனால் கிடைக்கும் பலன்கள் அதிகம். ஏனென்றால், கிட்டத்தட்ட சிந்தடிக் ஓயில் பலத்தை, செமி சிந்தடிக் ஓயில் கொண்டிருக்கிறது.

சிந்தடிக் ஓயில் – விசேஷமான மற்றும் சிக்கலான செயல்முறையால் தயாரிக்கப்படும் இந்த ஓயில், எதிர்பார்த்தபடியே விலை அதிகம். கோடை காலம், குளிர்காலம் என எப்படிப்பட்ட பருவநிலை நிலவினாலும், மிகச் சிறப்பான செயல்பாட்டை இது அளிக்கும். பொதுவாகவே, அதிக வெப்பநிலையால் இன்ஜின் ஓயில் ஆவியாகும்; மேலும், இன்ஜின் இயக்கத்தினால் அதிகளவில் மாசு பொருள்கள் ஓயிலில் தேங்கும். இதை சிந்தடிக் ஓயில்கள் முழுவதுமாகத் தவிர்த்துவிடும் என்பதுடன், இவை இன்ஜின் முழுதும் பரவி முழுமையான ஓயில் ஃபிலிமை உருவாக்குவதற்கும் துணை நிற்கும். இருந்தாலும், மிதமான பருவநிலை மற்றும் வழக்கமான இன்ஜின்களை அதிகமாகக்கொண்டிருக்கும் இந்தியாவில், சிந்தடிக் ஓயிலின் உண்மையான பலன்கள் பெரியளவில் தெரியாது.

மினரல், செமி சிந்தடிக், சிந்தடிக் தவிர, High Mileage மோட்டார் ஓயில் என்ற வகையும் உண்டு. இது அதிக கிலோ மீட்டர் ஓடிய அல்லது பழைய கார்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஏனெனில், அப்படிப்பட்ட இன்ஜின்களில் இருக்கக்கூடிய ஓயில் சீல் மற்றும் சீலன்ட்கள் நாளடைவில் தளர்ந்துவிடுவதால், ஓயில் சம்ப்பில் இருந்து இன்ஜின் ஓயில் லீக் ஆகத் தொடங்கிவிடுகிறது. எனவே, ஓயில் சீல் மற்றும் சீலன்ட்களில் அதிக அழுத்தம் கொடுக்காத விதத்தில், இந்த ஓயிலில் அதற்கான அடீட்டிவ்கள் கலந்திருக்கும். மேலும் ஓயில் லீக் ஆகாமல், இன்ஜின் முழுக்க சீராகப் பரவுவதால், இன்ஜின் வடிவமைப்புக்கு ஏற்ற ஓயில் ஃபிலிம் உருவாகிவிடும். இதனால் எவ்வளவு பழைய இன்ஜின் / அதிக கி.மீ ஓடிய இன்ஜினாக இருந்தாலும், High Mileage மோட்டார் ஓயில்களைப் பயன்படுத்தும் போது, இன்ஜின் ஸ்மூத்தாக இயங்கும்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here