மல்யுத்த அரங்கத்திற்குள் காதலை சொன்ன 5 ஜோடிகள்!

உலகத்தின் மிகப்பழைய விளையாட்டுக்களில் ஒன்றாக மல்யுத்தம், தற்போது வின்ஸ் மக்மஹோனின் தந்தையினால் மிகப்பெரிய வணிகமாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல மில்லியன் ரசிகர்களை கொண்ட WWE நிறுவனத்தின் தொடக்கம் இவர்தான்.

ஏராளம் நட்சத்திரங்களை உள்ளடங்கிய பெரு வணிகமாக WWE மாறி விட்டது. அது தவிர, இன்னும் ஏராளம் மல்யுத்த நிறுவனங்கள் உள்ளன. தற்போது மல்யுத்தத்தில் பெண்களும் விளையாடி வருகிறார்கள். தம்பதிகளாகவும் நுழைகிறார்கள். அரங்கிற்கு வந்த பின்னரும் தம்பதிகளாகிறார்கள்.

காதலை சொல்கிறார்கள். பல ஏற்கப்படுகின்றன. பல நிராகரிக்கப்படுகின்றன. ஏற்கப்படும் காதலில் சில குடும்ப உறவாக நீடிக்கிறது.

மல்யுத்த அரங்கத்திற்குள் காதலை சொன்ன சம்பவங்கள் சிலவற்றின் தொகுப்பு இது.

# 5 மத்யூ போல்மர்- எம்பர் மூன் 

எம்பர் மூன் கடந்த சில ஆண்டுகளாக WWE மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் வீராங்கணை. NXT மகளிர் முன்னாள் சம்பியனாக கடந்த ஆண்டு தேர்வானார். அதன் பின்னர், அந்த அரங்கில் முக்கிய வீராங்கணையாக, அசூக்காவுடன் இணைந்து நம்ப முடியாத பல போட்டிகளில் விளையாடி ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

WWE இல் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் மூன், இன்டிபென்டன்ட் சேர்க்யூட்டில் தொழில் முறை போட்டியாளராக இருந்தார். அப்போது இன்டிபென்டன்ட் சேர்க்யூட்டில் நட்சத்திரமாக இருந்த  மத்யூ போல்மருடன் கலப்பு போட்டிகளில் ஆடி வந்தார்.

இந்த ஜோடி பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து கொண்டிருந்தது. ஒரு போட்டியின் பின்னர் மூனை அரங்கிற்கு அழைத்த போல்மர் தனது காதலை சென்னார். மூன் ஏற்றுக்கொண்டார்.

இந்த ஜோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் கேம் ஆப் த்ரோன்ஸ் விழாவில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

# 4 பிரையன் கேஜ் – மெலிசா சாண்டோஸ்

இந்த பட்டியலில் இடம்பெற்ற இம்பாக்ட் மல்யுத்த அரங்கத்தின் ஒரே ஜோடி பிரையன் கேஜ் மற்றும் மெலிசா சாண்டோஸ். நிஜ வாழ்க்கை ஜோடிகளில் மிகவும் பிரபலமான பிராண்ட் பெயர்களாக அவர்கள் மாறிவிட்டனர்.

கேஜ் மற்றும் சாண்டோஸ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்யத் தொடங்கினர். சில மாதங்களில் இம்பாக்ட் அறிவிப்பாளினியான சாண்டோஸ் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார் என்பது தெரியவந்தது. ஜனவரி 2018 இல், சாண்டோஸ் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த பட்டியலில் உள்ள மற்ற ஜோடிகளைப் போலவே, கேஜ் மற்றும் சாண்டோஸ் மல்யுத்த அரங்கில் நிச்சயதார்த்தத்தில் ஈடுபட்டனர். முன்னாள் இம்பாக்ட் உலக சம்பியன் தனது நீண்டகால காதலியை 5 டிசம்பர் 2018 அன்று நிச்சயதார்த்தம் செய்தார். ஒரு போட்டிக்கு முன்னர், சாண்டோஸை மேடைக்கு அழைத்து காதலை சொன்னார்.

இந்த ஜோடி ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டது.

# 3 ஜோய் ரையன் – லாரா ஜேம்ஸ்

ஃபைனெஸ்ட் சிட்டி மல்யுத்த போட்டிகளை எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் தெரியவில்லை. அந்த போட்டிகளில் ஜோய் ரையன் மிகப்பிரபலம். நன்றாக ஆடுகிறாரோ இல்லையோ, குழப்படிக்காரராக மிகப்பிரபலமாகி விட்டார். கடந்த ஆண்டு முழுவதும் சர்ச்சைகளால் அறியப்பட்டவர்.

2016 பெப்ரவரியில் தனது நீண்டகால காதலி லாராவை மேடையில் நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் மற்றவர்களை விட வித்தியாசமாக.

சான் டியாகோவில் உள்ள ஃபைனெஸ்ட் சிட்டி மல்யுத்தத்தில் ரையன்- லாரா கலப்பு போட்டியொன்றில் ஆடிக் கொண்டிருந்தனர். இடையில் திடீரென, காதலை சொல்லி, மோதிரத்தை அணிவித்தாரர். அவரது காதலை லாரா ஏற்றுக்கொண்ட சமயத்தில், அவரை வீழ்த்தி போட்டியை வெற்றி கொண்டார். லாரா கோபிக்காமல் அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.

2017 நவம்பரில் இந்த ஜோடி திருமணம் செய்தது. ஆனால் ரையன் என்ன கிறுக்குத்தனம் செய்தாரோ, 208 நவம்பரில் இந்த ஜோடி பிரிந்து, விவாகரத்திற்கு விண்ணப்பித்தார்கள்.

# 2 ஜோன் செனா – நிக்கி பெல்லா

ஜோன் செனா- நிக்கி பெல்லா ஒரு காலத்தில் WWE இன் மிகப்பெரிய காதல் ஜோடிகளாக இருந்தனர். டிவாஸ் இல் அறிமுகமானதற்கு அடுத்த ஆண்டு -2012 இல் இருந்து ஜோன் செனாவுடன் டேட்டிங்கில் இருந்தார் நிக்கி பெல்லா.

ஜோன் செனாவை திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புவதாக நீண்டகாலமாக பெல்லா குறிப்பிட்டு வந்தார். எனினும் செனாவிற்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. 16 முறை உலக சம்பியன் பட்டத்தை வென்ற அவர், போட்டிகளிலிருந்து கவனத்தை குடும்ப வாழ்க்கை பக்கம் திருப்ப விரும்பியிருக்கவில்லை உடனடியாக குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் திட்டமில்லையென அவர் தெரிவித்து வந்தார்.

எதிர்காலம் குறித்த மாறுபட்ட கருத்துக்களால் அவர்களின் உறவும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டபடியிருந்தது.

ஆனால் ரஸல்மேனியா 33 போட்டிகளில் வென்றதை தொடர்ந்து, நிக்கி பெல்லாவிடம் அரங்கில் வைத்து காதலை சொன்னார். நிக்கி அதை ஏற்றுக்கொண்டார்.

இதற்கு ஒரு வருடம் கழித்து நிக்கி பெல்லா இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இருவருக்குமிடையிலான உறவு முறிந்ததை அது வெளிப்படுத்தியது. திருமண நாள் தள்ளிச் சென்று கொண்டிருந்ததால் இந்த விரக்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருவரும் தனித்தனி வழியில் செல்ல- புதிய உறவுகளை நோக்கி செல்ல முடிவெடுத்தனர். ஆனால் இன்னும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

# 1 அல்பர்டோ டெல் ரியோ – பைஜ் 

முன்னாள் டிவாஸ் சம்பியன் மற்றும் முதல் NXT மகளிர் சம்பியன் என்ற தனித்துவங்களைப் பெற்றவர் பிரித்தானியாவை சேர்ந்த பைஜ். ஆனால் 2016 ஆம் ஆண்டில் கழுத்தில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கை திருப்பத்தை சந்தித்தது.

உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்து WWE இலிருந்து திடீரென பைஜ் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த நேரம் ஆண்கள் பிரிவில் ஆடிக் கொண்டிருந்த மெக்சிக்கோவை சேர்ந்த அல்பர்டோ டெல் ரியோவுடன் டேட்டிங்கில் இருந்தார். பைஜ் இடைநீக்கப்பட்டதை தொடர்ந்து, WWE இலிருந்து வெளியேற அல்பர்ட்டோ பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இணைக்கப்பட்ட பைஜ், சிறிதுகாலத்தில் மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நிரந்தரமாக அதிலிருந்து விலகினார் பைஜ்.

பின்னர் புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள WWC  மல்யுத்த போட்டிகளில் விளையாட தொடங்கினார் அல்பெர்ட்டோ. அங்கு நடந்த போட்டிக்கு பைஜையும் அழைத்து சென்றிருந்தார். ஒரு போட்டியின் பின்னர் வளையத்திற்குள் நுழைந்த பைஜ், முழங்காலில் இருந்து, தனது காதலனுடன் தனது வாழ்நாள் முழுவதையும்  செலவிடலாமா என்று கேட்க, அவர் ஏற்றுக்கொண்டார்.

பைஜ் மற்றும் டெல் ரியோ ஆகியோர் 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் பல விஷயங்களால் திருமணத்திற்குள் நுழையவில்லை.  இது தம்பதியினரிடையே விரிசலை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் பிரிந்தனர். பைஜ் அந்த ஆண்டின் பிற்பகுதியில் WWE க்குத் திரும்பினார். பின்னர் ஒரு புதிய உறவுக்குச் சென்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here