நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க தீவிர முயற்சி: ஜனாதிபதி தேர்தல் தள்ளிச்செல்லவும் வாய்ப்பு?

ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், ஒரு திடீர் திருப்பமாக- நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நகர்வு சூடு பிடித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, ஜேவிபி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன கூட்டாக இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளன.

திரைமறைவில் கடந்த சில தினங்களாக இதற்கான நகர்வுகள் சூடு பிடித்துள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. ரணில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முயன்றாலும், அவர் வெற்றி வேட்பாளர் இல்லையென்ற காரணத்தை குறிப்பிட்டு சஜித்தை பங்காளிக்கட்சிகள் களமிறக்க விரும்புகின்றன. எனினும் சஜித்தை களமிறக்க ரணில் விரும்பவில்லை. சஜித் அலை மேலெழுந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை கையாள- நிறைவேற்று அதிகார முறையை அழிக்கும் முயற்சியை கையிலெடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்றதிகார முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் 20வது திருத்தத்தை நிறைவேற்ற ஜேவிபி நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. எனினும், அது முன்னகராமல் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மைத்திரி, மஹிந்த ஆகிய தரப்புக்களுடனும் சுமந்திரன் இது குறித்த பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முழு மனதுடன் சம்மதமாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதே முதற்கட்ட திட்டம். 20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவுடனும், எம்.ஏ.சுமந்திரன் பேச்சு நடத்தியுள்ளார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு கொள்கையளவான இணக்கத்தை மஹிந்த வெளிப்படுத்தியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here