யாழ் தொலைபேசி கடை திருட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில், யாழ் நகரத்திலுள்ள பிரபல உயர்தர பாடசாலையில் உயர்தரம் கற்கும் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகிறார்கள்.

அmண்மையில் தொலைபேசி விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு 18 கைத்தொலைபேசிகள் களவாடப்பட்டிருந்தன. அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் என மதிப்பிடப்பட்டிருந்தது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் திருடப்பட்ட தொலைபேசிகளின் ஐ.எம்.இ.ஐ எண்ணைப் பயன்படுத்தி, தொலைபேசிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். இதன்பின்னர் திருடர்கள் கைதாகினர்.

கைதான சந்தேகநபர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களிடமிருந்து, திருடப்பட்ட தொலைபேசிகள் 10 மீட்கப்பட்டன.

இது தொடர்பான விசாரணையை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here