சிங்கள நபருடன் உறவு வைத்திருந்த முஸ்லிம் பெண்: பிரதேசசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

பண்டாரகம பிரதேசசபை உறுப்பினர் அப்துல் ஹமீத் முகமது இம்தியாஸ் என்பவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பானந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டராகம, அதுலுகம பகுதியில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஒரு பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சாட்சிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அப்துல் ஹசன் பாத்திமா ஹைஷா என்ற முஸ்லிம் பெண், சிங்கள மனிதருடனான தனது உறவு காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம் தன்னை துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்திருந்தார்.

நீதிமன்ற விசாரணையில் அப்துல் ஹசன் பாத்திமா ஹைஷாவின் தாயை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதாகவும், எல்லைமீறி நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, சாட்சிகளை அச்சுறுத்திய விவகாரத்தில் பிரதேசசபை உறுப்பினர கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here