எழுக தமிழை நான் எதிர்க்கவில்லை; ஆனால் எமது எம்.பிக்கள் விரும்பவில்லை: மாவை!

“எழுக தமிழ் நிகழ்விற்கு நாம் எதிர்ப்பில்லை. ஆனால், அதில் கலந்து கொள்ள நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை.“

இவ்வாறு எழுக தமிழ் ஏற்பாட்டு குழுவிடம் தெரிவித்துள்ளார் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

எழுக தமிழ் ஏற்பாட்டாளர்கள் அனைத்து கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடி, ஆதரவு கோரி வருகிறார்கள். இதனடிப்படையில், தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுடன், எழுக தமிழ் ஏற்பாட்டாளர்கள் இரண்டு சுற்று பேச்சு நடத்தினார்கள்.

முதலில், மாவை சேனாதிராசாவை, தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் சிலர் சந்தித்து பேசினர். இதன்போது, எழுக தமிழ் நிகழ்வில் மாவை சேனாதிராசாவையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். இது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர் ஒருவர் கடந்த சில தினங்களின் முன்னர் தொலைபேசி வழியாக மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். ஏற்கனவே நடந்த சந்திப்பின் அடிப்படையில், மாவையின் நிலைப்பாட்டை அறியவே தொடர்பு கொண்டிருந்தார்.

“எழுக தமிழின் கோரிக்கைகள் நியாயமானவை. காலத்திற்கு தேவையானவை. அவற்றைத்தான் நாமும் வலியுறுத்தி வருகிறோம். அதனால், எழுக தமிழை நான் எதிர்க்கமாட்டேன். ஆனால், இந்த விடயத்தை நமது நாடாளுமன்ற குழுவில் விவாததித்தோம். நாம் கலந்துகொள்வது பொருத்தமானதல்ல என அவர்கள் கருதுகிறார்கள். அதனால், என்னால் கலந்துகொள்ள முடியாமல் உள்ளது“ என நாசூக்காக மறுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here