சஜித் வேட்பாளரா?: நாளை ராஜித வீட்டில் ஆராய்கிறார்கள் கூட்டணி தலைவர்கள்!

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை சந்தித்து பேசவுள்ளனர். அமைச்சர் ராஜித சேனரத்னவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முதன்மையாக கலந்துரையாடப்படவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முன்மொழிவு நாளை வைக்கப்படவுள்ளது.

நேற்று ரணில்- சஜித் சந்திப்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று வருமாறு ரணில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நாளைய கூட்டத்தில் சஜித்தின் பெயர் முன்மொழியப்பட்டு, கூட்டணி கட்சிகளின் அபிப்பிராயம் பெறப்படவுள்ளது.

இதேவேளை, நேற்று நடந்த ரணில்- சஜித் பேச்சு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும்படியும், கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் தாம் விரும்பவில்லை, ரணிலே தலைவராக தொடரலாமென்றும் சஜித் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், வேட்பாளர் விடயத்தை மத்தியகுழுவும், ஐக்கிய தேசிய முன்னணியும் தீர்மானிக்க வேண்டிய விடயம்என ரணில் தெரிவித்துள்ளார்.

எனினும், ரணிலின் கருத்தை சஜித் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நேற்றைய கூட்டம் முடிவின்றி முடிவடைந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here