
டீ.ஏ.ராஜபக்ச நினைவு மண்டபம் கட்டப்பட்ட விவகாரத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது என்பதனால் அதனை நிராகரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டை செய்திருந்தார்.
சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய நீதிபதிகள் முன்னலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது உத்தரவை பிறப்பித்த நீதிபதி சிசிர த ஆப்ரூ, மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை இணக்கத்துடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு போதுமான சட்டக் காரணிகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
