உணவகத்தில் அட்டகாசம் புரிந்து, துப்பாக்கியுடன் ஆட்களை விரட்டி சென்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கனடாவில் கைது!

கனடாவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பொதுமக்களிற்கு அச்சுறுத்தல் விடுத்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்தது.

ஒஷாவா பகுதியைச் சேர்ந்த ஜேய்சன் ஜெயகாந்தன் (27) மற்றும் மிசிசாகாவைச் சேர்ந்த ஜோன்சன் ஜெயகாந்தன் (26) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள அந்த துரித உணவகத்தில் வரிசையில் காத்துக்கொண்டிருந்த ஒருவருடன், உணவகத்தினுள் நுழைந்த இந்த இரண்டு தமிழர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வரிசையில் இருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முரண்பாட்டின் உச்சத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தனது மேற்சட்டையை உயர்த்தி மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டினார். பின்னர் அவரை அடித்து நிலத்தில் வீழ்த்தியுள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவுள்ளதாக தமிழ் இளைஞர்கள் மிரட்டியதையடுத்து, தாக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தப்பியோடியபோதும், கைத்துப்பாக்கியை நீட்டியபடி தமிழ் இளைஞர்கள் விரட்டி சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்தப் பகுதி ஒழுங்கை ஒன்றினூடாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவரையும் கைது செய்ததுடன் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here