இலங்கை வீரர்களின் மறுப்பிற்கு இந்தியா காரணமல்ல

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே சில இலங்கை வீரர்கள் பாக்கிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ருவிற்றர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

2009ல் பாகிஸ்தானில் அவர்கள் அனுபவித்த அனுபவம் காரணமாகவே வீரர்கள் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம், பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பும் வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் விளையாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியை அவர்களின் சொந்த நாட்டில் தோற்கடிக்க ஒரு வலுவான அணியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுத் கருணாரத்ன, லசித் மலிங்க, ஏஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமல், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித், நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மல், அகில தனஞ்சய மற்றும் திசர பெரேரா ஆகியோர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளனர்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்று அந்நாட்டின் இராஜாங்க அமைச்சர் ஃபவாத் உசேன் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தால் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து நீக்குவதாக அச்சுறுத்தியதாக நம்பகமான தகவல்கள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here