அப்பிள் டிவி பிளஸ் : நவம்பர் 1 முதல் உலகம் முழுவதும் அறிமுகம்

அப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் அந்நிறுவனம் ஆர்கேட் கேமிங் மற்றும் அப்பிள் டி.வி பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

அப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜொப்ஸ் அரங்கில் 2019 அப்பிள் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு (10) நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. டிம் குக் அறிமுக உரையுடன் துவங்கிய நிகழ்வில் அப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்பிள் ஆர்கேட் சேவையுடன் அப்பிள் டி.வி பிளஸ் சேவையும் அறிமுகமானது.

ஆப்பிள் ஆர்கேட் சேவை இந்தியாவில் செப்டம்பர் 19ம் திகதி வெளியாகிறது. இதே தினத்தில் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளமும் அறிமுகமாகிறது. அதே தினத்தில் இதர தென்னாசிய நாடுகளிலும் அந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான மாத கட்டணம் அமெரிக்க டொலர் மதிப்பில் 4.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

அப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக அப்பிள் அறிவித்துள்ளது.

ஆர்கேட் கேமிங் சேவையுடன் அப்பிள் டி.வி பிளஸ் 100 சேவையும் அப்பிள் சிறப்பு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த சேவை உலகம் முழுக்க 100 நாடுகளில் கிடைக்கும் என அப்பிள் தெரிவித்திருக்கிறது. அப்பிள் டி.வி பிளஸ் சேவைக்கான மாத கட்டணம் 4.99 டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் திகதி முதல் பயனாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கும். முதல் 7 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் சப்ஸ்கிரிப்ஷனாக மாறிவிடும் .

புதிதாக ஐபோன், ஐபாட், அப்பிள் டி.வி, மேக் அல்லது ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களை வாங்குவோருக்கு அப்பிள் டி.வி பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என அப்பிள் அறிவித்துள்ளது. டி.வி. சேவையில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. இவற்றில் சில நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டமும் அப்பிள் நிகழ்வில் வெளியிடப்பட்டன.

2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளியான புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவி, எல்.ஜி, ரோகு, சோனி மற்றும் VIZIO ஆகிய தளங்களிலும் அப்பிள் டிவி பிளஸ் சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here