அம்பாறையில் கைதான 11 பேரும் மேலதிக விசாரணைக்காக ரிஐடியிடம்!

அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 11 உறுப்பினர்கள் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியதை அடுத்து அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here