மருத்துவர் கனவு ஈடேறவில்லையாம்… போலி வைத்திராக நடித்தவர் போதனா வைத்தியசாலைக்குள் கைது!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்வெல்ல, பத்திகமவை சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவரே கைதாகியுள்ளார்.

மருத்துவர் போன்ற தோற்றத்தில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவ விடுதிக்கு சென்று கொண்டிருந்த ஒருவரில் சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் வழங்கிய தகவலின் அடிப்படையில், அந்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

சிறுவயதில் தந்தையை இழந்த இவர், க.பொ.த உயர்தரத்தில் 2 ஏ, 1 பி பெற்றதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். எனினும், வைத்தியராக வேண்டுமென்பதே அவரது சிறுவயது கனவாக இருந்ததாம். தனது கனவு நிறைவேறாத நிலையில், போலி வைத்தியராக நடித்து மனதை திருப்திப்படுத்துவதாக  விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here