யுவதியை ஏமாற்றி வல்லுறவிற்குள்ளாக்க முயன்ற வயோதிபருக்கு விளக்கமறியல்!

ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற இளம் யுவதியை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற உறவினரான முதியவரை விளக்கமறியலில் வைக்க நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாவலப்பிட்டி, கோடமட்டிட்ட கிராமத்தை சேர்ந்த 54 வயதான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இளம்பெண்ணொருவரை அதிகாலை 5 மணிக்கு ஏமாற்றி வீடொன்றிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றார். யுவதியின் கழுத்தை நெரித்து, தலையில் தாக்கியதில் யுவதி காயமடைந்துள்ளார்.

காமுகனின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிவந்த யுவதி, அயலவர்களின் உதவியுடன் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டார்.

அந்த பகுதியில் தாயும், மகளும் முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமொன்றின் பின்னர் அந்த பகுதி மக்கள் விழிப்புடன் இருந்ததால், அந்த யுவதி காப்பாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

எதிர்வரும் 20ம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here