ரணில்- சஜித் ஒன்றரை மணித்தியால மந்திராலோசனை: தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு என்கிறார் சஜித்!

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றிரவு நடந்தது. கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்ததாக, சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

அலரிமாளிகையில் நடந்த இந்த கலந்துரையாடல், இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்து, 11 மணிவரை நீடித்தது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில், அமைச்சர் சஜித்துடன், அமைச்சர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ரஜித சேனரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் சாதகமானது என்றும் அடுத்த இதன் முடிவை அடுத்த சில நாட்களில் அறிந்து கொள்வீர்கள் என்றும் கூறினார்.

இந்த கலந்துரையாடலில், கூட்டணி உருவாக்குவது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியதாக அமைச்சர் கூறினார்.

இன்றைய கலந்துரையாடல் குறித்து தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் பல சுற்றுகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

தன்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஆதரிக்கும் என்றார்.

அமைச்சர் மாலிக் சமரவிக்ரம ஊடகங்களுடன் பேசியபோது, இன்றைய கலந்துரையாடல் வெற்றி பெற்றது என்று கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here