புகையிரதத்தில் ஆடைகளை துவைத்து காயவிட்ட இளைஞன்!

இங்கிலாந்தில் வாலிபர் ஒருவர் மெட்ரோ புகையிரதத்தில் ஆடைகளை துவைத்து காயப்போட்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (29). இவர் அண்மையில் மெட்ரோ புகையிரதத்தில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமான பயணிகள் புகையிரதத்தில் இருந்தனர்.

புகையிரதத்தில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா, தான் கொண்டு வந்திருந்த வாளியில் தண்ணீரை ஊற்றி துவைப்பதற்கான கலவையிட்டு, ஆடைகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித குழப்பத்துடனும் பார்த்தனர்.

அதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின் மென்சா, ஆடைகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர் சகஜமாக அமர்ந்து கொண்டார். எல்வின் மென்சாவின் இந்த செயல் பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகுதான் எல்வின் மென்சா, ‘பிராங்’ எனப்படும் டி.வி. நிகழ்ச்சிக்காக இப்படி செய்தது தெரியவந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here