அக்கரைப்பற்றில் அரசியல் ஆய்வாளரின் வீடு மீது தாக்குதல்!

அக்கரைப்பற்றில் அரசியல் ஆய்வாளர் ஒருவரின் வீடு நேற்று அதிகாலை தாக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அவரது வீடு தாக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, 1 வது பிரிவு, யூனியன் வீதியில் உள்ள அஹமட் மொஹிதீன் அகமது ரஸ்மி என்பவரின் வீடே தாக்கப்பட்டுள்ளது.

ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் சில பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.

சம்பவம் நடந்தபோது, அஹமட் மொஹிதீன் அகமது ரஸ்மி வெளிநாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் அரசியல்வாதிகளை விமர்சித்து எழுதி வருகிறார்.  அவரது மனைவி பெற்றோருடன் வீட்டில் வசிக்கிறார்.

அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here