ஆளுமையற்ற, குரோத மனமுள்ள ஒருவர் மட்டு எம்.பியாக தெரிவானது வேதனை: வலயக்கல்வி பணிப்பாளர் காரசார விமர்சனம்!

மட்டக்களப்பில் ஆளுமையற்ற எம்.பியொருவரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தவகையானவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தது வெட்கக்கேடான விடயம் என குறிப்பிட்டுள்ளார் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சிறிதரன்.

நேற்று பன்சேனை பாரி வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் வள நிலையத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இப்படி தெரிவித்தார்.

“மட்டக்களப்பு எம்.பிகளில் ஒருவரை தவிர மிகுதி அனைவரும் திறமையானவர்கள். அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுகிறார்கள். ஆனால் ஒரேயொரு எம்.பி மட்டும் விதிவிலக்கானவர். அவர் ஆளுமையற்றவர். குரோத மனம் படைத்தவர். அதிகாரிகளை திட்டமிட்டு கேலி செய்பவர். அவருக்கு மக்கள் வாக்களித்ததை நினைத்து வேதனைப்படுகிறேன்“ என காரசாரமான விமர்சனங்களை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அதிகாரிகள் தொடர்பில் அடிக்கடி விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here