கோதுமை மா விலையில் மாற்றம் செய்யாமலிருக்க இணக்கம்!

கோதுமை மா நிறுவனங்கள் முன்னர் இருந்த விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று (10) அமைச்சருடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இன்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது அனைத்து கோதுமை மா நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்துடன் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்களை 3 வாரத்திற்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை முன்னர் இருந்த விலைக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here